நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பனையூர் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
அப்பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள், கால்நடை மருத்துவமனை ஆய்வுக்கூடம், சிகிச்சை பிரிவு, கால்நடை மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மருந்துகளின் இருப்பு குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்பு திருவள்ளுவர்நகர் மயான குளியல் தொட்டி தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.