நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் : கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் முருகன் வரவேற்றார். சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பங்கேற்று, பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற என்.சி.சி., மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரிய ஆளுமையாக வளரலாம்'' என்றார்.
செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், கல்லுாரி முதல்வர்கள் தவமணி, சரவணன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கணினிதுறை தலைவர் பார்வதி செய்திருந்தார். துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

