நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரைக் கல்லுாரியில் 136வது கல்லுாரி விழா செயலாளர் நடனகோபால் தலைமையில் நடந்தது. முதல்வர் சுரேஷ் வரவேற்றார். பெங்களூரு தனியார் நிறுவன செயல் தலைவர் நரசிம்மன் சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மூத்த அலுவலர்களுக்கு முன்னாள் பேராசிரியர்கள் பிரேமா ராணி, நெய்வாசகம், பாண்டி செல்வி, அலுவலர் பட்டாபி பரிசு வழங்கினர்.
உறுப்பினர் இல. அமுதன், சுயநிதி பிரிவு தலைவர் நாகராஜன், இயக்குநர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவிகள் ஜெயஸ்ரீ, யோகஸ்ரீ நடனம் நடந்தது. பொருளாளர் அனந்த சீனிவாசன் நன்றி கூறினார்.

