ADDED : டிச 18, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மீனாட்சி அரசின் பெண்கள் கல்லுாரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி துவங்கியது.
முதல்நாளான நேற்று கல்லுாரி முதல்வர் வானதி தலைமை வகித்தார். இணைஇயக்குனர் தமிழரசி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜெயராஜ், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் மரியபொன் ரேகா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கல்லுாரியில் 45 மகளிர் சுயஉதவிக்குழுவினர் அமைத்திருந்த அங்காடிகளில் நிர்வாகவியல் மாணவியர் விற்பனை உதவியாளராக பணியாற்றினர்.
கல்லுாரி மாணவியரும் 19 கடைகளை நடத்தினர். மகளிர் குழுவினரின் தயாரிப்பு பொருட்கள் பலவும் கடைகளில் வைக்கப்பட்டு இருந்தது.