ADDED : ஏப் 22, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் அலங்காநல்லுார் வட்டாரத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் கீழ் தங்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அழகாபுரியில் மாணவி அபிநயா, கிருஷ்ணலட்சுமி ஆகியோர் விவசாயிகளுக்கு வாழையில் 'பாரிங் மற்றும் பிரேலினேஜ்' முறையில் நுாற் புழு தாக்குதலை குறைக்கும் வழிமுறைகளை தெரிவித்தனர். வாழைக் கன்றை களிமண் கலவையில் நனைத்து 'கார்போ பியூரான்(3)ஜி 40 கிராம் அளவு துாவி நட வேண்டும்.
இதன் மூலம் நுாற் புழுத் தாக்குதலும், வேர் மற்றும் மண் மூலம் பரவும் நோய்களும் கட்டுப்படுத்தப்படுகிறது என செயல் முறையில் விளக்கினர்.