/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோல்வி என்பது முடிவு அல்ல கமிஷனர் சித்ரா பேச்சு
/
தோல்வி என்பது முடிவு அல்ல கமிஷனர் சித்ரா பேச்சு
ADDED : மே 16, 2025 03:26 AM
மதுரை: தோல்வி என்பது முடிவு அல்ல; வீறுகொண்டு எழுவதற்கான வாய்ப்பாக கருதி வெற்றி என்ற இலக்கை எட்ட வேண்டும் என பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா பேசினார்.
மதுரை மாநகராட்சி சார்பில் பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
இதில் கமிஷனர் சித்ரா பேசியதாவது: தோல்வி என்பது முடிவு அல்ல. பிளஸ் 2வில் தோல்வியடைந்த மாணவிகள் வீட்டில் முடங்கி விடாமல் துணைத் தேர்வை சந்திக்க மனதை தயார்படுத்தியுள்ளதன் மூலம் வெற்றி இலக்கில் பயணிக்க துவங்கி விட்டீர்கள். அந்த முயற்சிக்கு பாராட்டு. கனவு எப்போதும் பாதியில் நின்றுவிடக் கூடாது. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லுாரியில் சேர அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி மேற்கொள்ளும். அச்சமின்றி தேர்வுக்கு தயாராகுங்கள் என்றார்.
துணை மேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், கவுன்சிலர் சுதன், தலைமையாசிரியை முனியம்மாள், கல்வி பிரிவு கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன் பங்கேற்றனர்.