/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குற்றங்களை கண்காணிக்க அதி நவீன கேமராக்கள் தயார் கமிஷனர் தகவல்
/
குற்றங்களை கண்காணிக்க அதி நவீன கேமராக்கள் தயார் கமிஷனர் தகவல்
குற்றங்களை கண்காணிக்க அதி நவீன கேமராக்கள் தயார் கமிஷனர் தகவல்
குற்றங்களை கண்காணிக்க அதி நவீன கேமராக்கள் தயார் கமிஷனர் தகவல்
ADDED : அக் 10, 2025 03:05 AM
மதுரை: தீபாவளியை முன்னிட்டு மாசி வீதிகளில் குற்றச்சம்பங்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
மதுரை விளக்குத்துாண் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள், புறக்காவல் நிலையங்களை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
தீபாவளியையொட்டி நகரில் மக்கள் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க 16 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்படவுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலமும் நெரிசல் கண்காணிக்கப்படும்.
நகரில் 61 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்து கண்காணிக்கப்படும். நான்கு மாசி வீதிகளிலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த 6 வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் மக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பொருட்கள் வாங்கி செல்லலாம் என்றார்.