/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முறைகேடு நியமனங்களை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை

ADDED : அக் 10, 2025 03:05 AM
மதுரை: 'மதுரை கல்வித்துறையில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் உட்பட முறைகேடாக நியமிக்கப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
மதுரையில் இக்கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், செயலாளர் சந்திரன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ராஜசேகர், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் கணேசன், கள்ளர் பள்ளி மாவட்ட கிளை செயலாளர் மாரீஸ்வரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பணியிடம் முதுகலை ஆசிரியருக்குரியது. இரண்டு ஆண்டுகளாக இப்பணியிடம் முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியரான சார்லசை நியமித்துள்ளது விதிமீறல். கண்டிக்கத்தக்கது. கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் (கல்வி) பணியிடம் பட்டதாரி ஆசிரியர் நிலைக்குரியது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர் அந்த பதவியில் நீடிக்கிறார். இதுவும் விதிமீறலே. இவ்விரு நியமனங்களையும் உடன் ரத்து செய்து தகுதியுள்ள ஆசிரியர்களை சி.இ.ஓ., வெளிப்படையாக நியமிக்க வேண்டும். இல்லையென்றால் அக்., 14 முதல் சி.இ.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடக்கும் என்றனர். இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.