/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசாருக்கு வாரவிடுமுறை தந்து கொண்டிருக்கிறோம் கமிஷனர் சொல்கிறார்
/
போலீசாருக்கு வாரவிடுமுறை தந்து கொண்டிருக்கிறோம் கமிஷனர் சொல்கிறார்
போலீசாருக்கு வாரவிடுமுறை தந்து கொண்டிருக்கிறோம் கமிஷனர் சொல்கிறார்
போலீசாருக்கு வாரவிடுமுறை தந்து கொண்டிருக்கிறோம் கமிஷனர் சொல்கிறார்
ADDED : ஏப் 26, 2025 03:44 AM
மதுரை :  மதுரை நகரில் போலீசாருக்கு வாரவிடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
மதுரை நகர் ஆயுதப்படையில் போலீசாருக்கு விடுமுறை போன்ற சலுகைகள் கமிஷனர் உத்தரவிட்டும் வழங்க மறுப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து கமிஷனர் தெரிவித்துள்ளதாவது:
ஆயுதப்படை எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு சுழற்சி முறையில் அனைத்து பணிகளுக்கும் பாகுபாடின்றி பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வி.ஐ.பி.,க்கள் வரும்போது பாதுகாப்பு பணிக்கு அனைவரையும் பயன்படுத்துகிறோம்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விருப்ப மனு கேட்டு அதன் அடிப்படையில் ரைட்டர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீண்டகாலமாக ஒரே அலுவலில் இருப்பவர்கள் அன்றாட நிர்வாக பணிக்கும் மாற்றப்படுகிறார்கள். போலீசாருக்கு வார ஓய்வு முறையாக தந்து கொண்டிருக்கிறோம். ஈட்டிய விடுப்பு கேட்பவர்களுக்கு விடுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொருத்தும், அன்றாட பணியின் தன்மைக்கு ஏற்பவும் அனுமதி வழங்கப்படுகிறது.  அவசர விடுப்பு கேட்பவர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.