ADDED : செப் 17, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தங்களை சீர்படுத்த, அனைத்து வகை கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என, பதிவாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
ஊதியத் திட்டங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, நிதி நிலைமைக்கு ஏற்ப ஊதிய அமைப்புகளை பரிந்துரைப்பதே இக்குழுவின் நோக்கம். இதன் மூலம் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க முடியும் என்று பதிவாளர் அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.