ADDED : பிப் 17, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக புதிய காம்பேக்டர் வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி வார்டுகளில் பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதை சரிசெய்ய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள், மணலை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு காம்பேக்டர் வாகனங்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து ரூ.85. 20 லட்சத்தில் இரண்டு வாகனங்கள் வாங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் ஷர்மா, சுவிதா, துணை கமிஷனர் சரவணன், நகர்நல அலுவலர் வினோத்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.