/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போட்டி; எஸ்.டி.பி.ஐ., தீர்மானம்
/
மதுரையில் போட்டி; எஸ்.டி.பி.ஐ., தீர்மானம்
ADDED : பிப் 23, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் எஸ்.டி.பி.ஐ., ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடந்தது. வடக்குமாவட்ட தலைவர் பிலால் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ மதுரைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மாநில தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதுரையில் நடந்த மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய கட்சியினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பொது செயலாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.