/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் 'பசை' வார்டுகளை கைப்பற்ற போட்டா போட்டி! ஏ.இ.,க்கள் இடமாறுதலை கவனிப்பாரா கமிஷனர்
/
மாநகராட்சியில் 'பசை' வார்டுகளை கைப்பற்ற போட்டா போட்டி! ஏ.இ.,க்கள் இடமாறுதலை கவனிப்பாரா கமிஷனர்
மாநகராட்சியில் 'பசை' வார்டுகளை கைப்பற்ற போட்டா போட்டி! ஏ.இ.,க்கள் இடமாறுதலை கவனிப்பாரா கமிஷனர்
மாநகராட்சியில் 'பசை' வார்டுகளை கைப்பற்ற போட்டா போட்டி! ஏ.இ.,க்கள் இடமாறுதலை கவனிப்பாரா கமிஷனர்
ADDED : ஜன 31, 2024 07:10 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 வார்டுகளிலும் உதவிப் பொறியாளர்களை (ஏ.இ.,க்கள்) 'டிரான்ஸ்பர்' செய்யும் நடவடிக்கை துவங்கிய நிலையில் 'பசை'யான வார்டுகளை கைப்பற்றுவதில் அதிகாரிகளுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் 100 வார்டுகளில் தற்போது 19 ஏ.இ.,க்கள், 9 ஜே.இ.,க்கள் (இளநிலை பொறியாளர்கள்) ரெகுலர் பணியிடமாகவும், மீதமுள்ள வார்டுகளுக்கு 'தேர்ச்சி திறன் கிரேடு 2' என்ற ஐ.டி., பாலிடெக்னிக் முடித்த (இதிலும் சிலர் பி.இ., தகுதியில் உள்ளனர்) அலுவலர்கள் கூடுதல் பணியாக ஏ.இ.,க்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
புதிய வீடுகளுக்கு பிளான் அப்ரூவல், ரோடு பணிகள், ரோடு பராமரிப்பு, பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்புக்கு அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஏ.இ.,க்கள் பங்கு அதிகம். லோக்சபா தேர்தலை காரணம் காட்டி அனைத்து வார்டுகளிலும் ஏ.இ.,க்கள் உட்பட மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளிலும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கான 'டிரான்ஸ்பர்' நடவடிக்கை துவங்கியுள்ளது. இதனால் வருவாய் அதிகம் கிடைக்கும் வார்டுகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: 2 வார்டுகளுக்கு ஒரு ஏ.இ., என்ற அடிப்படையில் 50 ஏ.இ., ஜே.இ.,க்கள் இருக்க வேண்டும். ஆனால் மொத்தமே 28 பேர் தான் ரெகுலர் பணியில் உள்ளனர். பல வார்டுகளில் தேர்ச்சி திறன் கிரேடு 2 அலுவலர்கள் ஏ.இ.,யாக கூடுதல் பொறுப்பில் உள்ளனர்.
இதில் ரெகுலர் ஏ.இ.,க்கு ஒரு வார்டு, தேர்ச்சி திறன் அலுவலர்களுக்கு 3 வார்டுகளை கவனிக்கும் நிலையும் உள்ளது. இப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் 'ஆசி'யால் இதுபோன்ற பாகுபாடு உள்ளதாக ஏற்கனவே சர்ச்சையும் உள்ளது. தற்போது விரிவாக்கப் பகுதிகளான மண்டலம் 1, மண்டலம் 5ல் உள்ள வார்டுகளுக்கு மாறுதல் பெற பலர் விரும்புகின்றனர். இப்பகுதி வார்டுகளில் தான் ரூ.பல கோடியில் ஆயிரக்கணக்கான ரோடுகள் பணி நடக்கின்றன.
புதிய வீடுகள், நிறுவனங்கள் கட்டுமானம் உட்பட பல்வேறு 'பசை'யான பணிகளும் நடக்கின்றன. அப்பகுதி வார்டு அதிகாரிகளை கேட்பாருமில்லை, பார்ப்பாருமில்லை. எனவே அந்த வார்டுகளை கைப்பற்ற 'சிபாரிசு' அடிப்படையில் பலர் முட்டி மோதுகின்றனர். 'சிபாரிசு'க்கு இடமின்றி தகுதி, அனுபவம், திறமை அடிப்படையில் கமிஷனர் மதுபாலன் 'டிரான்ஸ்பர்' நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.