ADDED : ஆக 22, 2025 03:03 AM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சுதந்திர தின ஓவியம், நாடகம், பேச்சுப்போட்டி நடந்தது.
பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அய்யர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார்.
தமிழ் பேச்சுப்போட்டியில் பிரஜனா மெட்ரிக் பள்ளி பிருதிவிகா, ஓவியப் போட்டியில் கீர்த்தனா தேவி முதல் பரிசு, ஆங்கில பேச்சு, நாடகப்போட்டியில் மகாத்மா குளோபல் பள்ளி அஸ்விகா, சர்வேஷ் ராஜ், கங்கேஸ்வரன், ஸ்ரீஅஸ்வத், இனிய நிர்மலா சம்யுக்தா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். பேராசிரியர்கள் சத்யபிரியா, ஷெர்லி ரொவீனா தொகுத்துரைத்தனர்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முனியம்மாள் பரிசு வழங்கினார். வணிகவியல் கணினி மேம்பாட்டுத்துறை தலைவர் மஞ்சுளா நன்றி கூறினார்.