sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

/

மதுரை கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

மதுரை கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

மதுரை கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்


ADDED : செப் 28, 2024 04:22 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் ஆண்டாள்புரம் வசுதாரா வளாக மீனாட்சி நிலையத்தில் அக். 14, 15ல் நடக்கின்றன.

பள்ளி மாணவர் பிரிவில், 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் அரசியல் படலத்தில் 10 செய்யுள் ஒப்புவித்தல், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'பாரதி போற்றிய புலவர்கள்' எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 'கம்பனில் நல்ல சகோதரன்' எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகியவை அக். 14ல் நடக்கின்றன. இசை, ஓவியப் போட்டிகள் அக். 15ல் நடக்க உள்ளன.

கல்லுாரி பிரிவில், ஓவியப் போட்டி, 'குணங்களால் உயர்ந்தவன் (வீடணன்)' எனும் தலைப்பில் பேச்சு போட்டி ஆகியவை அக்.15ல் நடக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு அனுமதியில்லை.

போட்டிகள் காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். மாணவர்கள் தங்கள் பெயர்களை, 'செயலாளர், மதுரைக் கம்பன் கழகம், விங்ஸ் இன்ஜினியரிங், 301, மேலமாசி வீதி, மதுரை - 625 001' என்ற முகவரிக்கு அக்.10க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், ஒவ்வொரு போட்டியிலும் மூவர் பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3ம் பரிசு ரூ. ஆயிரம் வழங்கப்படும்.

போட்டிகளை நிறுவனர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, தலைவர் சங்கர சீதாராமன், ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன், ஆலோசகர் ராமமூர்த்தி, இணைச் செயலாளர்கள் ராஜா, ரேவதி சுப்புலட்சுமி நடத்துகின்றனர். விவரங்களுக்கு 99408 33868 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us