நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரியில் 'பாரம்பரியத்தின் முத்திரைகள்' என்ற கருத்துருவில் கல்லுாரிகளுக்கு இடையேயான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாத்திமா மேரி தலைமை வகித்தார்.மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி கலாசாரம் குறித்து பேசினார்.கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பரிசு வழங்கினார். லேடிடோக் கல்லுாரி மாணவர்கள் கேடயம் பெற்றனர். எழுத்தாளர் ஆதித்யன், கல்லுாரி செயலாளர் இக்னேசியஸ் மேரி, துணை முதல்வர் அருள்மேரி, வரலாற்றுத்துறை தலைவர் இவாஞ்சலின் கலந்துகொண்டனர்.