/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி முன் டாஸ்மாக் கடை குறித்து புகார்; 'போலீஸ் அக்கா' திட்டம் அறிமுக நிகழ்ச்சியில்

ADDED : ஜூலை 05, 2025 12:52 AM
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் நடந்த 'போலீஸ் அக்கா' திட்ட நிகழ்ச்சியில் பள்ளிகள் முன்புள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலம்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் பாலியல் உள்ளிட்ட புகார்களை தைரியமாக புகார் செய்யும் வகையில் 'போலீஸ் அக்கா' திட்டம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் உள்ள 9 போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவியர் பாலியல் துன்புறுத்தல்கள், பிற பிரச்னைகள் குறித்து போலீசாரிடம் பகிர்ந்து தீர்வு பெறும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் இந்த திட்டத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் 9 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டம் குறித்து விளக்கமளித்தனர்.
கலந்துரையாடலில் பங்கேற்ற உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, எழுமலை விஸ்வ வித்யாலயா பள்ளி மாணவர்கள், பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது, இங்கு வாகனங்களில் வருவோர் அதிவேகமாக வருவதால் விபத்து அபாயம் உள்ளது என்றனர். இது குறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் இணைந்து புகார் கொடுத்தால் கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., கேட்டுக்கொண்டார்.