/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்
/
நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : டிச 12, 2025 04:25 AM
மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு, முகநுால் பக்கத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் அளிக்கப்பட்டது.
பாரதிய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சத்திய சுபாஷ் அளித்த மனு:
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக சமூக வலைதளங்களில் நீதிபதியை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவரது புகைப்படத்தை பதிவிட்டு, அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்தும், நீ தித்துறையை களங்கப்படுத்தும் விதமாக ராம் சேகுவாரா என்ற முகநுால் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது .
சம்பந்தப்பட்ட முகநுால் பக்கத்தை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

