ADDED : டிச 11, 2025 05:19 AM
மேலுார்: பூசாரிபட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு நிர்வாகி மணவாளன், நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சேகர், மலர் மற்றும் விவசாயிகள் விதை மசோதா, புதிய தொழிலாளர் விரோத மின்சார திருத்த சட்டத்தின் நகலை எரித்தனர்.
சோழவந்தான்: ஏ.ஐ.கே.எஸ்., சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வேல்பாண்டி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் குருசாமி, ரத்தினம், கந்தவேல், விவேக் உட்பட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விருமாண்டி, விவசாயிகள் சங்கம் சந்தானம், மா.கம்யூ., ராமர், பெண்கள் சங்கம் நிவேதா, மக்கள் அதிகாரம் சிவகாமு, அனைத்து விவசாயிகள் சங்கம் பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

