/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்
/
தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்
ADDED : டிச 11, 2025 05:19 AM
மேலுார்: கேசம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் 2 மேல்நிலை, பிளாஸ்டிக் தொட்டி மூலம் போர்வெல், காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் விநியோகிக்கும் மோட்டாருக்கு செல்லும் மின் கம்பியில் மரக்கிளைகள் உரசுவதால் மின் சப்ளை அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் குடிநீர் விநியோகிக்கவில்லை.
அதனால் காலி குடங்களுடன் மக்கள் தவம் கிடக்கின்றனர். விவசாயத்திற்கு பாய்ச்சும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஊராட்சி செயலரிடம் புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் புலம்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.

