/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடையை மீறி நகருக்குள் நுழையும் வெளியூர் லாரிகள் செக்போஸ்ட் போலீசார் மீது புகார்
/
தடையை மீறி நகருக்குள் நுழையும் வெளியூர் லாரிகள் செக்போஸ்ட் போலீசார் மீது புகார்
தடையை மீறி நகருக்குள் நுழையும் வெளியூர் லாரிகள் செக்போஸ்ட் போலீசார் மீது புகார்
தடையை மீறி நகருக்குள் நுழையும் வெளியூர் லாரிகள் செக்போஸ்ட் போலீசார் மீது புகார்
ADDED : நவ 22, 2024 04:41 AM
மதுரை: மதுரை நகரில் தடைசெய்யப்பட்ட நேரத்தில் வெளியூர், வெளிமாநில லாரிகள் நுழைவதாகவும், செக்போஸ்ட் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க காலை 11:00 - மதியம் 3:00 மணி வரை, இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை மட்டுமே மதுரை நகருக்குள் வெளியூர், வெளிமாநில சரக்கு லாரிகள் வந்து செல்லலாம். ஆனால் இருநாட்களாக காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியில் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வெளியூர், வெளிமாநில லாரிகள் அதிகம் வந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விசாரணையில் செக்போஸ்ட் போலீசார் மெத்தனமாக இருந்ததே காரணம் எனத்தெரியவந்தது.
திண்டுக்கல் பகுதியில் இருந்து வரும் லாரிகள் விளாங்குடி செக்போஸ்ட், தேனி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் விராட்டிபத்து செக்போஸ்ட், சமயநல்லுார் - திருமங்கலம் நான்குவழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கோச்சடை செக்போஸ்ட்டை கடந்து வரவேண்டும்.
பொதுவாக ஊருக்குள் நுழையாமல் பைபாஸ் ரோடு வழியாக வாகனங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். அதுபோல் நகருக்குள் இருக்கும் காளவாசல் பைபாஸ் ரோட்டை கருதி வெளியூர், வெளிமாநில லாரி டிரைவர்கள் நகருக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். செக்போஸ்ட் போலீசார் தடுக்கும்போது அவர்களிடம் 'பேச்சுவார்த்தை' நடத்தி நகருக்குள் வந்துவிடுகின்றனர்.
போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால்தான் இதுபோன்ற குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.