/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவை பேரூராட்சி வரி விதிப்பிலும் ரூ.பல கோடி முறைகேடு புகார்
/
பரவை பேரூராட்சி வரி விதிப்பிலும் ரூ.பல கோடி முறைகேடு புகார்
பரவை பேரூராட்சி வரி விதிப்பிலும் ரூ.பல கோடி முறைகேடு புகார்
பரவை பேரூராட்சி வரி விதிப்பிலும் ரூ.பல கோடி முறைகேடு புகார்
ADDED : ஜூலை 31, 2025 03:02 AM

வாடிப்பட்டி : 'பரவை பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளன. மதுரை- - திண்டுக்கல் ரோடு பகுதியில் வீடுகள், அபார்ட்மென்ட்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மஹால்கள் என விரிவாக்கமடைந்து வருகிறது.
இங்குள்ள வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு கட்டடம் என ரசீதுகள் வழங்கியும், குடியிருப்பு வரைபட அனுமதி வழங்கியதும் பேரூராட்சி உதவி இயக்குனரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அரசுக்கு பல ஆண்டுகளாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்
அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது: பரவை பேருராட்சியில் இன்று வரை பல வணிக கட்டடங்கள் எவ்வித அனுமதி பெறாமலும், சொத்து வரி விதிக்கப்படாமலும் விதிமீறலுடன் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிய இடத்தை மறைத்து, குறைந்த அளவிலான இடத்திற்கு ரசீது, வசூல் என நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஆதாயத்துக்காக செயல்பட்டு வருகின்றனர்.
வரி விதிப்பில் விதிமீறல் கட்டடங்கள், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேவையான ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளேன். நீதிமன்றத்தையும் நாடுவேன் என்றார்.