ADDED : அக் 19, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் எஸ்.எஸ்., மண்புழு பண்ணையில் 10 நாட்கள் நடந்தது.
தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். வேளாண் ஆசிரியர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் ஜெ ய்கணேஷ் வரவேற்றார். மண்புழு தொழிற்சாலை உரிமையாளர் சரவணன், வேளாண் ஆசிரியர் நந்தினி பயிற்சி அளித்தனர்.
உர படுக்கை, செறிவூட்டிய மண் கலவை, ஆட்டு உரம், பஞ்சகாவ்யம் மற்றும் ஹியூமிக் அமிலம் தயாரித்தல், உரம் சேகரித்தல், உரங்களை சலித்தல், பிரித்தெடுத்தல், எடை போடுதல், சிப்பமிடுதல் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பால் சாம்சன் நன்றி கூறினார்.