/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கண்டனம்
/
வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கண்டனம்
வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கண்டனம்
வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கண்டனம்
ADDED : நவ 23, 2024 05:17 AM
மதுரை; தொழில் வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானத்திற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. வரி முறையால் தொழில் வணிகத் துறையினர் இன்றுவரை பல்வேறு குழப்பங்களையும் சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரி வருவாயை சம அளவில் பிரித்துக்கொள்வதில் தான் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்துகின்றன.
வரியை முறையாக வசூலித்து அரசுகளுக்கு செலுத்தும் வணிகர்களின் சிரமங்களையும் குறைகளையும் நிவர்த்தி செய்வதில் மத்திய, மாநிலஅரசுகளுக்கு அக்கறை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
வாடகை செலுத்தி கடை நடத்துவோர், கடை வாடகைக்கு மாதந்தோறும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை நவம்பரில் அமலுக்கு வந்துள்ளது. இது தொழில் வணிகர்களை பெரிதும் பாதிக்கும்.
பெரும்பாலான பலசரக்கு கடைகள் வாடகை கட்டடங்களில் தான் செயல்படுகின்றன. பதிவு பெறாத கட்டட உரிமையாளரிடம் பதிவு பெற்ற வணிகர் கடையை வாடகைக்கு எடுத்து அதற்கு 'ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்' முறையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு உரிமையாளர், கடைக்காரர்களின் உறவை பாதிக்கும்.
வணிகர்களுக்கும் கடை வாடகையோடு இது கூடுதல் வரிச் சுமையாக இருக்கும். இதனால் பொருட்களின் விலை உயரும்போது பொதுமக்களும் பாதிக்கப்படுவர். இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.