/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிவைடரில் மோதிய அரசு பஸ் வெளியே விழுந்த கண்டக்டர்
/
டிவைடரில் மோதிய அரசு பஸ் வெளியே விழுந்த கண்டக்டர்
ADDED : டிச 13, 2024 04:32 AM
திருமங்கலம்: திருமங்கலத்தில் அரசு பஸ் ரோட்டின் நடுவில் இருந்த டிவைடரில் மோதியது. பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து கண்டக்டர் ரோட்டில் விழுந்தார்.
இன்று கார்த்திகை தீபத்திருநாள் என்பதால் திருவண்ணாமலைக்கு திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பஸ் நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் அருண் டேனியல் ஓட்டினார். 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இரவு 8:20 மணிக்கு திருமங்கலம் - மதுரை ரோட்டில் ஸ்டேட் பேங்க் அருகே ரோட்டின் நடுவில் இருந்த டிவைடரில் பஸ் மோதியது. இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து கண்டக்டர் கோபாலகிருஷ்ணன் வெளியே விழுந்து காயமடைந்தார்.
டிரைவர் அருண் டேனியல், மதுரை ஒத்தக்கடை ராமமூர்த்தி, தனக்கன்குளம் முத்துப்பாண்டி, திருநெல்வேலி தர்மராஜ் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.