நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை அருகே ஊர்மெச்சிகுளம் கணேசன் 56, மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்தார். பிப்.24 அதிகாலை டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வேலைக்குச் சென்றார்.
பரவை கொண்டமாரி பாலம் அருகே எதிரே வந்த வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தால் நிலை தடுமாறினார். இதில் சாலையின் 'சென்டர் மீடியனில்' டூவீலர் மோதி விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கணேசன் நேற்று இறந்தார். இன்ஸ்பெக்டர் கருப்புசாமி விசாரிக்கிறார்.

