sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதுரையில் ரெட்டியார்கள் உரிமை மீட்பு மாநாடு

/

 மதுரையில் ரெட்டியார்கள் உரிமை மீட்பு மாநாடு

 மதுரையில் ரெட்டியார்கள் உரிமை மீட்பு மாநாடு

 மதுரையில் ரெட்டியார்கள் உரிமை மீட்பு மாநாடு


ADDED : பிப் 24, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம், ராயபாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த ரெட்டியார்களின் உரிமை மீட்பு தென் மண்டல மாநாட்டை, ரெட்டி நலச்சங்க மாநில தலைவர் ரவி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாநில பொதுச்செயலர் ராஜா பூர்ண சந்திரன் வரவேற்றார்.

'ரெட்டி அரசாட்சிகளின் வரலாறு' என்ற நுாலை, புதுச் சேரி காங்., - எம்.பி., வைத்தியலிங்கம் வெளியிட, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் வேந்தர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா, ரெட்டி சமுதா ய பாடல்களின் குறுந்தகட்டை வெளியிட, சென்னை ஜே.எஸ்.ஆர்., இன்ப்ரா டெவலப்பர் நிறுவன சேர்மன் சேகர் பெற்றுக் கொண்டார். மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு பெற, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரெட்டி இனத்தின் உட்பிரிவுகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள ரெட்டி சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க தலைவர் ரவி பேசுகையில், ''ரெட்டி சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் கட்சிகளுக்கு, 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us