/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆளுமைத்திறன் இல்லை காங்., எம்.பி., கார்த்தி குற்றச்சாட்டு
/
த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆளுமைத்திறன் இல்லை காங்., எம்.பி., கார்த்தி குற்றச்சாட்டு
த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆளுமைத்திறன் இல்லை காங்., எம்.பி., கார்த்தி குற்றச்சாட்டு
த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆளுமைத்திறன் இல்லை காங்., எம்.பி., கார்த்தி குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2025 11:48 PM
அவனியாபுரம், : ''தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளுமைத்திறனோ, நிர்வாகத்திறனோ கிடையாது,'' என, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த காங்., எம்.பி., கார்த்தி குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: கரூர் சம்பவம் மிகுந்த வருத்தம், வேதனையை அளிக்கிறது. இந்தியாவில் கூட்ட நெரிசலில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
கரூரில் கூட்டத்தை நடத்தியவர்கள் கவனக்குறைவாக இருந்திருக்கின்றனர். வருவோரை கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் நடத்தியவர்களுக்கு நிர்வாக திறன் இல்லை. அதுமட்டுமல்ல நிர்வாக திறன் அந்த இயக்கத்துக்கே இல்லை.
போலீசார் முறையாக பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனரா என்பது விசாரணையில் தான் தெரியவரும். த.வெ.க.,வுக்கு 2 ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் இல்லாத குறைபாடே கரூர் சம்பவத்திற்கு காரணம். விஜய்க்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவருக்கு ஆளுமை திறன் இருக்கிறதா என்பதில்தான் சந்தேகம் உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை என்கின்றனர். ஒவ்வொரு பிரச்னைக்கும் சி.பி.ஐ., யை அணுகுவது நல்லதல்ல. அப்புறம் எதற்காக இங்கு போலீசார் உள்ளனர். மறைந்த முதல்வர்கள் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தும் விதம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக கூறப்படும் விஷயத்தில், நாம் பின்னோக்கி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன என்றார்.