/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேலைக்காக வந்தவர்களை எப்படி வாக்காளர்களாக சேர்க்க முடியும் கேட்கிறார் காங்., கார்த்தி எம்.பி.,

ADDED : ஆக 11, 2025 04:52 AM
அவனியாபுரம்: ''தமிழகத்தில் வேலைக்காக வந்தவர்களை எப்படி வாக்காளர்களாக சேர்க்க முடியும்' என காங்., கார்த்தி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
வெளிமாநிலத்தவர் 6 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளராக மாறிவிட்டதாகக் கூறுகின்றனர். இங்கு வேலைக்காக வருவோர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் எந்தெந்த தொகுதியில் வாக்காளர்களாக உள்ளனர் என்பதைக் கூற வேண்டும். இதனால் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தன்மையே மாறிவிடும். இதை முழுமையாக ஏற்க முடியாது. வேலைக்காக வந்தவர்களை எப்படி வாக்காளர்களாக சேர்க்க முடியும்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு தேவையில்லை என்பதுதான் எனது கருத்தும். பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கூடுதல் வரி விதிக்கின்றனர் இதனால் கடல் உணவு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும். இந்தியா இல்லாமல் அமெரிக்க பொருளாதாரத்தை நடத்த முடியாது. அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி நெருக்கமாக உள்ளார் என்ற வார்த்தைகள் பொய்த்துப்போனது. தேர்தலை சந்திக்க காங்., தயாராக உள்ளது. எங்கள் பகுதியில் தி.மு.க., கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். புதிதாக அரசியல் கட்சி தொடங்குபவர்கள் ஆளுங்கட்சியைத்தான் விமர்சிப்பார்கள். விஜயும் அப்படித்தான்.
'இண்டியா' கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க., தலைமையில் கூட்டணி உள்ளது. எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்பது தி.மு.க., வின் நிலைப்பாடு என்றார்.