ADDED : பிப் 29, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை மதுரை நகர் காங்., சார்பில் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடியேந்தி கோரிப்பாளையத்தில் மறியல் நடந்தது.
நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, துரையரசன், கவுன்சிலர்கள் முருகன், ராஜ்பிரதாபன், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் மாலிக், மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கார்த்திக், மகிளா காங்., நிர்வாகிகள் ஷானவாஸ் பேகம், நளினி, சுஜாதா, ஜோதிலட்சுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

