ADDED : ஏப் 06, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நகர் காங்., அலுவலகத்தில் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யதுபாபு, கவுன்சிலர் முருகன், துணைத் தலைவர் பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மதுரைக்கு இன்று (ஏப்.,6) வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

