/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருவேடகம் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
/
திருவேடகம் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : பிப் 23, 2024 06:25 AM
சோழவந்தான் : திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாதர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது.
பழமையான இக்கோயிலில் அம்மன், சுவாமிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவற்றில் அம்மன் சன்னதி முன்பு கொடிமரம் இல்லை. எனவே ஆகம விதிப்படி கொடிமரம் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
தேவகோட்டை மெய்யப்பச் செட்டியார் உபயத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் 42 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனிதநீர் கலசத்திற்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், எந்திர ஸ்தாபனம், நவரத்தின பஞ்சலோகங்கள் போடப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிலை நிறுத்தி, தீபாராதனை நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர்கள் சரவணன், பாலமுருகன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார் உட்பட பலர் பங்கேற்றனர்.