/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பைப் லைன்' மீது கட்டுமானம் வீணாகிறது குடிநீர்
/
'பைப் லைன்' மீது கட்டுமானம் வீணாகிறது குடிநீர்
ADDED : மே 17, 2025 01:31 AM

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளத்தில் மாநகராட்சி குடிநீர் 'பைப் லைன்' மீது பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பஸ் ஸ்டாப் கட்டியதால் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
கடந்தாண்டு பிப்ரவரியில் மேற்கு தொகுதி நிதி ரூ.15 லட்சத்தில் பஸ் ஸ்டாப் கட்ட பூமி பூஜை நடந்தது. இதற்காக 30 வயது மரத்தின் கிளைகளை வெட்டினர். பில்லர் அமைக்க தோண்டிய குழிகளில் பரவை பேரூராட்சி, மாநகராட்சி குடிநீர் குழாய்கள் சென்றன. பேரூராட்சி குழாயை மாற்றி அமைத்தனர். மாநகராட்சி 'பைப் லைன்' பழுது ஏற்பட்டால் பஸ் ஸ்டாப்பை இடித்து பழுது நீக்கும் நிலை உருவாகும், மரத்தை அகற்றக்கூடாது என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாலமுருகன் கூறுகையில், ''தினமலர் செய்தியால் மரம் காப்பாற்றப்பட்டது. இங்கு சிறிய அளவு பஸ் ஸ்டாப் போதும். இதன் அருகிலேயே இடமிருந்தும், இங்கு டிரான்ஸ்பார்மர் இல்லை எனக்கூறி ஒதுக்கிய நிதியில் பஸ் ஸ்டாப் கட்டத் துவங்கினர். பணிகள் முடிவு பெறாத நிலையில் தற்போது மாநகராட்சி குழாய் 2 இடங்களில் உடைந்து 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது'' என்றார்.