நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : கம்மா உலகளாவிய கூட்டமைப்பு சார்பில் 2026ல் நடக்கும் மாநாடு சம்பந்தமாக தமிழக தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது.
நிறுவனத் தலைவர் ஜெட்டி சுகுமார் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். தளபதி எம்.எல்.ஏ., மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, சென்னை கம்மா ஜன சங்கம் நிறுவன உறுப்பினர் ராமன், திண்டுக்கல் மாவட்ட கம்மா சங்க தலைவர் புருஷோத்தமன், விக்ரம் மருத்துவமனை சேர்மன் நாராயணசாமி மற்றும் திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் நம் பெருமாள்சாமி போட்டோவை டாக்டர் நாராயணசாமி திறந்து வைத்தார்.