நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மேலுாரில் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக அலங்காநல்லுார், பாலமேட்டிற்கு வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை வரவேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகர் செயலாளர் முகமது யாசின் பங்கேற்றனர்.

