ADDED : செப் 21, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கிளைச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் மலைச்சாமி வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன், மதுரை மண்டல துணைச்சேர்மன் மணி, வடக்கு மாவட்டச் செயலாளர் நாகேந்திரன் ஆலோசனைகள் வழங்கினர்.
அரசுபஸ்களை முறையாக இயக்குதல், சோழவந்தான் பேரூராட்சியில் சாக்கடை, குப்பையை முறையாக அகற்றுதல், நிழற்குடை அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வர்த்தகர் அணி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
