தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எப்போது பயன்பாட்டுக்கு வரும் பழம் பதப்படுத்தும் நிலையம்

எப்போது பயன்பாட்டுக்கு வரும் பழம் பதப்படுத்தும் நிலையம்

எப்போது பயன்பாட்டுக்கு வரும் பழம் பதப்படுத்தும் நிலையம்


ADDED : செப் 21, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: முக்கம்பட்டியில் கட்டப்பட்டுள்ள விளை பொருட்களை சேமிப்பு, பழம் பதப்படுத்துவதற்காக 4 வருடங்களுக்கு முன் கட்டியும் பயன்பாட்டுக்கு வராத கட்டடம் குறித்து வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கம்பட்டியில் வேளாண் வணிகத் துறைக்கு சொந்தமான இடம் 10 ஏக்கர் உள்ளது. இதில் 5 ஏக்கரில் 6 ஆயிரம் டன் அளவு விளை பொருட்கள், 5 ஆயிரம் டன் பழங்களை பதப்படுத்த குளிர்பதன வசதியுடன் கோடவுன் அமைக்க 2019 ல் திட்டமிட்டனர். 2021 ல் கட்டுமான பணிகள் துவங்கியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.21 கோடியில் கோடவுன்கள் கட்டி முடிக்கப்பட்டன. மீதமுள்ள 5 ஏக்கரில் தனியாருக்கு உணவு பொருள் தயாரிக்க ஒப்பந்தம் செய்து அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருளுக்கு முன்னுரிமை கொடுத்து கோடவுனில் வைக்க முடிவு செய்தனர். ஆனாலும் அக்கட்டடம் ஏனோ பயன்பாட்டிற்கு வரவில்லை.

அப்பகுதி விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: இங்கு கோடவுன் வந்தால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பி நிலங்களை விற்றோம்.கோடவுன் பயன்பாட்டுக்கு வருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சாக்லேட், பப்பாளி சாலட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

மக்களின் பணம் ரூ. 21 கோடி பயன்பாடின்றி வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் கோடவுனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வியாபாரிகளுடன் ஆலோசித்து, பழங்களை பதப்படுத்துவதன் மூலம் அரசுக்கு வருவாய், மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

வேளாண் மார்க்கெட்டிங் அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 6 ஆயிரம் டன் நெல்லை சேமித்து வைக்க வாடகைக்கு விட்டுள்ளோம். பழ வியாபாரிகளிடம் பேசி வருகிறோம். பத்து நாட்களில் ஒப்பந்ததாரர் மின் இணைப்பு வழங்கி கோடவுனை ஒப்படைத்ததும் கோடவுன் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us