UPDATED : நவ 15, 2026 05:02 PM
ADDED : நவ 15, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கமிஷனர் கவுரவ்குமார் தலைமை வகித்தார். தனி குடியிருப்புகளில் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது. அரசு வழிமுறைகளை பின்பற்றி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கமிஷனர் கவுரவ்குமார் கேட்டுக்கொண்டார்.
துணை கமிஷனர் ஜெயினுலாப்தீன், தலைமை பொறியாளர் ராமசாமி, நகர திட்டமிடுநர் முரளி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
