தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘ரீல்ஸ்’ மோகத்தை தவிர்த்து சிறந்த நுால்களை வாசியுங்கள்: நீதிபதி அறிவுரை

‘ரீல்ஸ்’ மோகத்தை தவிர்த்து சிறந்த நுால்களை வாசியுங்கள்: நீதிபதி அறிவுரை

‘ரீல்ஸ்’ மோகத்தை தவிர்த்து சிறந்த நுால்களை வாசியுங்கள்: நீதிபதி அறிவுரை


UPDATED : நவ 15, 2026 04:56 PM

ADDED : நவ 15, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 04:56 PM ADDED : நவ 15, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘ரீல்ஸ் மோகத்தை தவிர்த்து சிறந்த நுால்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும்’’ என மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கஸ்துாரிபா காந்தி அறக்கட்டளை, ஸ்ரீபூ கலாசார மையம் சார்பில் ‘காந்தியை அறிவோம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கொள்குறி வினாக்கள், ஓவியம், கட்டுரை போட்டிகள் நடந்தன.

பரிசளிப்பு விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பரிசு வழங்கி பேசுகையில், ‘‘ரீல்ஸ் மோகத்தில் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், சிறந்த நுால்களை வாசிக்க வேண்டும். காந்தியை போல் சமூக சேவையில் ஈடுபடுவதுடன், எடிசனை போல் புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்க வேண்டும்’’ என்றார். மைய செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us