sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இழப்பீடு தர அதிகாரிக்கு உத்தரவு

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இழப்பீடு தர அதிகாரிக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இழப்பீடு தர அதிகாரிக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இழப்பீடு தர அதிகாரிக்கு உத்தரவு


ADDED : ஜன 26, 2025 04:45 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : வழக்கு நிலுவையில் இல்லாத நபரை வெளிநாடு செல்ல அனுமதித்த உத்தரவை நிறைவேற்றாததால், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு, அபராதமாக சட்டப் பணிகள் ஆணையத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க திருச்சி குடியேற்றத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை ேஷக் அலாவுதீன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை. வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல என்னை அனுமதிக்க திருச்சி குடியேற்றத்துறை (இமிகிரேஷன்) அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரர் 3 வழக்குகளிலும் விடுதலையாகிவிட்டார். அவர் மீது வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. அவருக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தேடப்படும் நபர் (லுக் அவுட்) சுற்றறிக்கை காலாவதியாகிவிட்டது. அதை செயல்படுத்த முடியாது. மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு 2024 நவ.22 ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் திருச்சி குடியேற்றத்துறை அதிகாரி சுகீபன் மீது உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: இந்நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் ேஷக் அலாவுதீன் ரியாத் செல்வதற்கான 'டிக்கெட்'டுடன் திருச்சி விமான நிலையம் சென்றார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு செல்ல அனுமதி கோரி அவர் குடியேற்றத்துறை கவுன்டரை அணுகினார். அவரது பெயர்​​புதுக்கோட்டை எஸ்.பி.,பிறப்பித்த 'லுக் அவுட்' சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளதாகக்கூறி சுகீபன் தடுத்து நிறுத்தினார். இந்நீதிமன்ற உத்தரவை ேஷக் அலாவுதீன் சமர்ப்பித்துள்ளார். அவர் குடியேற்ற அனுமதி பிரிவில் டிச.1 ல் 10 மணி நேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டார். பின் பயண ஆவணங்களுடன் திருச்சி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டார். பின் ஆவணங்களை சரிபார்த்ததன் மூலம் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவை அவரது தரப்பு வழக்கறிஞர் இ மெயிலில் குடியேற்றத்துறை அதிகாரிக்கு அனுப்பினார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறினால் அவமதிப்பு வழக்கு தொடர வழிவகுக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ேஷக் அலாவுதீன் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டபோது அவர் பயணிக்க வேண்டிய விமானம் கொழும்பு புறப்பட்டது. அவரை தடுத்து வைக்க எந்த காரணமும் இல்லை. விமான நிலையத்தில் மக்கள் முன்னிலையில் காரணம் இன்றி, எந்த தவறும் செய்யாத அவரை தடுத்து வைத்து அவமதித்துள்ளனர். மக்கள் முன்னிலையில் அவர் நற்பெயரை இழந்தார். அவர் 'டிக்கெட்' கட்டணத்தை இழந்தார். வெளிநாடு செல்வது ரத்தானது.

நீதிமன்றத்தின் மகத்துவம், கண்ணியத்தை நிலைநிறுத்துவதே அவமதிப்பு வழக்கின் நோக்கம். இந்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் சுகீபன் மீறியுள்ளார். அவர் ேஷக் அலாவுதீனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அபராதமாக ரூ.25 ஆயிரத்தை தமிழக சட்டப்பணிகள் ஆணையத்திற்கு சுகீபன் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us