/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொடர் போராட்டம்: விவசாய சங்கம் முடிவு
/
தொடர் போராட்டம்: விவசாய சங்கம் முடிவு
ADDED : ஜன 01, 2026 05:44 AM
மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்கம், தென்னக ஐக்கிய கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: சர்க்கரை ஆலையை திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் மறுக்கின்றனர். இலவச திட்டங்கள், ஜல்லிக்கட்டு திடல், விளையாட்டு மைதானங்களுக்கு நிதி இருக்கும் போது விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் விரக்தியில் உள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறியபடி அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்கவில்லை. அதனால் மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஜன.5 ஆர்ப்பாட்டம் நடத்தவும், கரும்பு பயிரிடும் பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

