
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை விமான நிலையம் செல்லும் சாலை பகுதியில் உள்ள விரிசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த முனீஸ், ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு விமான நிலைய சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பெருங்குடியைச் சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து, மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடினர். முனீஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். விசாரணையில் முனீஸ், பழநிக்கு பாதயாத்திரை சென்று நான்கு நாட்களுக்குமுன்பு வீடு திரும்பினார் என தெரிந்தது. முனீஸின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென கூறி உடலை எடுக்க மறுப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

