ADDED : ஜன 01, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். மனைவி கவுசல்யா. இவர்களது மகன் வர்ஷன், மகள் வனலட்சுமி. ஓராண்டுக்கு முன் உடல்நலக்குறைவால் முருகன் இறந்தார். தாய், பாட்டி, தாத்தா அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்த நிலையில், நேற்று கவுசல்யாவும் இறந்தார்.
அவரது இறுதிச்சடங்கிற்கு பணமின்றி தவிப்பதை அறிந்த ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச் சங்கம் தலைவர் பாலகுரு, செயலாளர் பிரேம், சங்க உறுப்பினர்கள் நிதியுதவி செய்து இறுதிசடங்கை நடத்தி கொடுத்தனர். குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கும் உதவுவதாக உறுதி அளித்தனர்.

