/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை
/
யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை
யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை
யாகசாலையில் நுழைய முயற்சி திருப்பரங்குன்றத்தில் சர்ச்சை
ADDED : ஜூலை 12, 2025 01:49 AM
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றத்தில் யாக சாலைக்குள் அனுமதி இன்றி செல்ல முயன்றவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் யாக சாலை பூஜை துவங்கியது. அப்போது, அங்கு தமிழ் வேத பாடசாலை நிறுவனர் சத்தியபாமா தலைமையில் சிலர், தாங்களும் யாக பூஜையில் பங்கேற்போம் எனக்கூறி யாகசாலைக்குள் செல்ல முயன்றனர்.
அவர்களிடம், சிவாச்சாரியார்கள், பாடசாலையில் பூஜைகள் துவங்க உள்ளது; யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவாச்சாரியார்களுக்கும், யாகசாலைக்குள் நுழைய முயன்ற பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார், அப்பெண்களை அப்புறப்படுத்தினர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், அனுமதியின்றி யாகசாலைக்குள் நுழைய முயன்றதாக சத்தியபாமா உட்பட சிலர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியபாமாவும் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

