/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு '5 ஆண்டு'
/
டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு '5 ஆண்டு'
டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு '5 ஆண்டு'
டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு '5 ஆண்டு'
ADDED : அக் 29, 2025 02:25 AM
மதுரை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவான நபரை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயன்ற நபருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்திற்கு கீழ், 2011ல் சில பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்து, அவ்வழியாக ரத யாத்திரை செல்ல இருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில், விசாரணை அதிகாரியான மதுரை சிறப்பு விசாரணை குழு அப்போதைய டி.எஸ்.பி., கார்த்திகேயன், 2013 ஜூலை 8ல் வழக்கில் தொடர்புடைய தென்காசியை சேர்ந்த முகமது ஹனிபாவை பிடிக்க சென்ற போது தாக்கப்பட்டார்.
ஹனிபா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முகமது ஹனிபாவை திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம், 2018 டிச., 20ல் விடுவித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் முகமது ஹனிபாவிற்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். அவரை திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்க வேண்டும்' என்றனர்.

