ADDED : அக் 09, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செல்லம்பட்டியில் உசிலம்பட்டி வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் இணைந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செல்லம்பட்டி தனியார் மண்டபத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ராஜா, இணைச்செயலாளர் நீதிமுத்தையா, மகேந்திரன், செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஜெயம், ரமேஷ், அன்பழகன், கயல்விழி, முருகன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணி நிரந்தரம், முதல்வர் மருந்தகத்தில் விற்பனையை கட்டாயப்படுத்தக் கூடாது, அடிப்படை வசதிகளுடன் கட்டடங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.