/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி - நுாலகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மாநகராட்சி - நுாலகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 24, 2025 03:35 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கலைஞர் நினைவு நுாற்றாண்டு நுாலகத்தை பயன்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கமிஷனர் சித்ரா - முதன்மை நுாலகர் தினேஷ்குமார் முன்னிலையில் நுாலகத்தில் நடந்தது.
இதன் மூலம் மாணவர்களுக்கு கட்டணமில்லா உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் தலா 25 புத்தகங்கள் வரை 60 நாட்களுக்கு எடுத்துச் செல்லலாம்.
இதன் மூலம் 38 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
மேலும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆங்கில பயிற்சியும், குழந்தைகளுக்கான கதை சொல்லுதல், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உரைகளை ஆடியோ வடிவில் மாற்றி வழங்குவது உட்பட பிற சேவைகளும் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர்ஜெய்சங்கர், துணை முதன்மை நுாலகர் சந்தானகிருஷ்ணன், நுாலகர் ஜெபஜோஸ்லின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.