நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; காந்தி ஜெயந்தியன்று மதுரையில் மண்டலம் 2, கூடல்நகர் பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்வதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் முருகன், நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி 60 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் 5 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் 329 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 132 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.