/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி மாணவர்கள் 'இஸ்ரோ'வுக்கு பயணம்
/
மாநகராட்சி மாணவர்கள் 'இஸ்ரோ'வுக்கு பயணம்
ADDED : செப் 29, 2025 04:38 AM
மதுரை : ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்ச்சி மையத்தை பார்வையிட மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானம் மூலம் கமிஷனர் சித்ரா நேற்று வழியனுப்பி வைத்தார்.
மாநகராட்சி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டி, சிந்தனையை விரிவடையச் செய்யும் வகையில் அவர்களை தேர்வு செய்து களப் பயணம் மேற்கொள்ள வைக்கும் நடவடிக்கையை கமிஷனர் சித்ரா மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் மதுரையில் இருந்து ஐதராபாத்தில் உள்ள அறிவியல் மையத்தை மாநகராட்சி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்து அவர்களை ரயிலில் அனுப்பி வைத்தார்.
தற்போது மாநகராட்சி, ரோட்டரி கிளப் மதுரை மிட் டவுன் இணைந்து பிளஸ் 1 படிக்கும் 12 மாநகராட்சி பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 20 பேர் என 32 பேரை விமானம் மூலம் 'இஸ்ரோ' செல்ல ஏற்பாடு செய்துள்ளார். நேற்று மூன்று நாட்கள் பயணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து அம்மாணவர்களை கமிஷனர் சித்ரா வாழ்த்தி அனுப்பி வைத்தார்.