நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடர்கல்வி விரிவாக்கபணித்துறை சார்பில் பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி ஜூனில் துவங்குகிறது. இதற்கான சேர்க்கை தற்போது நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத மாணவிகள் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கையும் உள்ளது.
பயிற்சி நிறைவு செய்யும் பெண்களுக்கு பல்கலை சான்று அளிக்கப்படும், சுயதொழில் தொடங்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் 'இயக்குநர், வயது வந்தோர் தொடர்கல்வி, காமராஜ் பல்கலை மாலைநேரக் கல்லுாரி வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை' முகவரியில் விண்ணப்பம் பெறலாம் என துறை இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.